WELCOME TO NEWS THAGAVAL

ஒரு நபர் கமிட்டி கருத்து கேட்பு



அரசு  ஊழியர், ஆசிரியர் ஊதிய முரண்பாடு ஒரு நபர் கமிட்டி இன்று கருத்து கேட்பு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியிடம், சங்கங்கள் இன்று நேரில் ஆஜராகி தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதால் அவற்றை களைய வேண்டும் என்று கேட்டனர்.
அத்துடன் பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வர வேண்டும், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுவோர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
கடந்த 8ம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் ஜாக்டோ-ஜியோ அமைப்பிரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊதிய முரண்பாடுகளை களைய, நிதித்துறை செலவினப் பிரிவு செயலாளர் சித்திக் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிட்டியில் ஜாக்டோ-ஜியோ வினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலகத்தில் ஒரு நபர் கமிட்டியில் மனு கொடுத்தனர். இதன் பேரில் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு ஒருநபர் கமிட்டியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் 2வது மாடியில் உள்ள ஒரு நபர் கமிட்டியில் இன்று சங்கப் பிரதிநிதிகள் நேரில் ஆஜராக உள்ளனர். ஒரு சங்கத்தின் சார்பில் 5 பேருக்கு மிகாமல் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்பில் கலந்து கொள்ள உள்ள சங்கங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் ஒரு வாரத்துக்கு இந்த கருத்து கேட்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *