WELCOME TO NEWS THAGAVAL

சிறுபான்மையினர்க்கு கல்வி உதவித் தொகை


மத்திய அரசின்  சிறுபான்மையினருக்கான (முஸ்லீம்கள் உட்பட) கல்வி உதவித் தொகை

எப்படி விண்ணப்பிப்பது என்ற முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரத்தில் பின் தங்கிய (முஸ்லீம்கள் உட்பட) சிறுபான்மை மாணவர்களுக்கு
  • Pre-matric,
  • Post-matric,
  • MERIT CUM MEANS
ஆகிய மூன்று விதமான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகின்றது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த உதவித் தொகை கிடைக்காது. அரசு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி உதவித் வழங்கும், இது போன்ற உதவிகளில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கும், பெற்றோரின் ஆண்டு வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 
இந்த கல்வி உதவி பற்றிய பொதுவான தகவல் : 
• மாணவர்கள் 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
• ஒரு குடும்பத்தில் 2 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
• Post-matric, மற்றும்  MERIT CUM MEANS உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைக்கப்படும்.  Pre-matric  உதவித் தொகை பள்ளியின் வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைக்கப்படும். 
• இந்த கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் மற்ற எந்த கல்வி உதவிக்கும் விண்ணப்பிக்க கூடாது.
• ஒரு முறை கல்வி உதவி வழங்கப்பட்டால் “Renewal” முறையில் படிப்பு முடியும் வரை விண்ணபித்து கல்வி உதவித் தொகை பெறலாம்
• மாணவரின் வருகை பதிவேடு (attendance) கணக்கில் கொள்ளப்படும், வருகை பதிவேடு குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்
• தொடர்ந்து 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுக்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும்
• குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
• மொத்த கல்வி உதவி தொகையில் 30 % மாணவியருக்கு ஒதுக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை :   
மாணவர்கள்  மத்திய அரசின் கல்வி உதவி இணையதளத்தில் http://www.scholarships.gov.in விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு கல்லூரி/பள்ளி நிர்வாகம் மாணவர்களின் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் அங்கீகரிக்க வேண்டும். பிறகு அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
31-9-2018
கீழ்காணும் சான்றிதழ்களை ஸ்கேன் (scan) செய்து இணையதளத்தில் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.  
• வருமான சான்றிதழ் (Self declaration of Income Certificate by the student) 
• சாதி சான்றிதழ் (Self declaration of community by the student)
• மாணவரின் புகைப்படம்
• தொலை பேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி (E-Mail)
• பள்ளி / கல்லூரியின் சான்று படிவம் (Institution Verification Form) 
• கடந்த ஆண்டு எடுத்த மதிப்பெண் (Self Attested Certificate of Previous Academic year Mark sheet)
• கல்வி கட்டண ரெசிப்ட்  (Fee Receipt of current course year)
• மாணவரின் வங்கி கணக்கின் முதல் பக்கம் (Proof of Bank Account in the name of student)
• ஆதார் எண் 
• இருப்பிட சான்றிதழ் (Residential Certificate)
• ஹாஸ்டலில் தங்கி படிப்பவர் எனில் கல்லூரி/பள்ளி நிர்வாகத்திடம் இருந்து அதற்க்கான உறுதி சான்றிதழ்  பெற வேண்டும்.
• Renewal முறையில் மீண்டும் கல்வி உதவி பெற Utilization certificate கல்லூரி/பள்ளி  நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டும்.
ஒவ்வொறு வகையான கல்வி உதவிதொகையின் விபரத்தை விரிவாக பார்ப்போம்.
Pre-matric கல்வி உதவித் தொகை : 

இந்த உதவி தொகை 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும் .
உதவித் தொகை விபரம் : 
Post-matric கல்வி உதவித் தொகை : 
இந்த உதவித் தொகை சான்றிதழ் படிப்பு (ITI), டிப்ளோமா, இளநிலை பட்ட படிப்பு (UG), முதுகலை பட்ட படிப்பு (PG) மற்றும் Phd படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றது.
இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும் .
உதவித் தொகை விபரம் : 
படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.7000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படுகின்றதுஇது அரசால் வழங்கப்படும் அதிகபட்ச தொகை. கல்வி கட்டணத்திற்க்கு ஏற்ப இதை விட குறைவாகவும் வழங்கப்படும்.
MERIT CUM MEANS கல்வி உதவி தொகை : 
இந்த உதவித் தொகை  பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம்  படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டரை  லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை பெற
உதவித் தொகை விபரம் : 
வீட்டிலிருந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு  ரூ.25,000  வழங்கப்படுகின்றது. 
ஹாஸ்டலில் தங்கி மாணவர்களுக்கு வருடத்திற்க்கு  ரூ.30,000 வழங்கப்படுகின்றது. இது அரசால் வழங்கப்படும் அதிக பட்ச தொகை. கல்வி கட்டணத்திற்க்கு ஏற்ப இதை விட குறைவாகவும் வழங்கப்படும்.

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *