WELCOME TO NEWS THAGAVAL

கும்பமேளா -2019


உலகிலேயே மனித குலம் அதிகளவில் ஒரே இடத்தில் சங்கமிக்கும் கும்பமேளா

பிரயாக்ராஜில், கும்பமேளா-2019-க்கான ஏற்பாடுகள் தயார்


பிரயாக்ராஜில் 2019 ஜனவரி 15 செவ்வாயன்று அதிகாலை தொடங்கவுள்ளது.  அப்போது, முதலாவதாக சாதுக்கள் புனித நீராடுவர். இதுவே கும்பமேளாவின் தொடக்கமாகும்.  இதையொட்டி, அமைதியாக நீராடுவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை கும்பமேளா நிர்வாகம் மேற்கொண்டிருப்பதுடன், சாதுக்கள் தங்களது முகாம்களிலிருந்து புனித நீராடுவதற்காக பேரணியாகச் செல்லும் பாதையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் 14.01.2019 முதல் வாகனங்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் கும்பமேளா – 2019 நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன.  அகில இந்திய வானொலி, கும்பவாணி என்ற பெயரில் ஒரு கிலோவாட் சக்தி கொண்ட பண்பலை ஒலிபரப்பு கருவியையும் அங்கு நிறுவியுள்ளது.  அலகாபாத் அகில இந்திய வானொலி நிலையம் இந்த மையத்திலிருந்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும். இந்த பண்பலை அலைவரிசை காலை மணி 5.55 முதல் ஒலிபரப்பு சேவையை துவங்கி, இரவு மணி 10.05 வரை தொடரும்.  இந்த ஒலிபரப்பு 2019 மார்ச் 4 வரை நடைபெறும்.  இந்த சிறப்பு ஒலிபரப்பு 35 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்கும்.  கும்பவாணி பண்பலை அலைவரிசை மூலம் கும்பமேளா பற்றிய நிகழ்ச்சிகளை யூ-டியூப் - பிலும் நேரடியாக ஒளிபரப்ப  அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது.
      மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15, மவுனி அமாவாசை தினமான பிப்ரவரி 4 மற்றும் வசந்த பஞ்சமி தினமான பிப்ரவரி 10 அன்றும்  சாதுக்களின் புனித நீராடல் நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி நேரடியாக ஒலிபரப்ப உள்ளன.  பவுஷ் பூர்ணிமா, மாகி பூர்ணிமா மற்றும் மகா சிவராத்திரி தினங்களில் நடைபெறவுள்ள புனித நீராடல் நிகழ்ச்சிகளும் டி.டி.உ.பி. மற்றும் டி.டி. இந்தியா அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.  ஜனவரி 15 முதல் கும்பமேளா பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகளை தினந்தோறும் 3 மணிநேரம் ஒளிபரப்பவும் தூர்தர்ஷன் ஏற்பாடு செய்துள்ளது.
கும்பமேளா: வரலாற்று முக்கியத்துவம்
      பிரயாக்ராஜில், கங்கை-யமுனை-சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில், மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15 அன்று நடைபெறவுள்ள கும்பமேளாவின்  முதலாவது புனித நீராடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஏராளமான சாதுக்கள், சாமியார்கள், சாதாரண பக்தர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.  சாதுக்களின் முதலாவது புனித நீராடல் நிகழ்ச்சி, யாத்ரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதாக அமையும்.
      இந்துக்களின் நாட்காட்டிப்படி, மாக் மாதத்தில் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறும்.  சாதாரண கும்பமேளா ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறும்.  2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவிற்காக 700 ஹெக்டேர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு  பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்காக 3,200 ஹெக்டேர் பரப்பளவில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
      கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு சாலை போக்குவரத்துக் கழகம், 6000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதுடன், உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.   இவைதவிர, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகிறது. புதிதாக இயக்கப்படும் விமானங்களை கையாள ஏதுவாக, இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையமும் விரைவில் திறக்கப்பட உள்ளது.  இதுதவிர, கும்பமேளாவிற்கு வரும் யாத்ரிகர்கள் குறைந்த செலவில் தங்குவதற்காக குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *