அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
2019-20 இடைக்கால நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிதி அமைச்சகம்
2019-20 இடைக்கால நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்
மத்திய நிதி, பெருநிறுவனங்கள் விவகாரம், ரயில்வே & நிலக்கரித்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் 01.02.2019 தாக்கல் செய்த 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் வருமாறு:-
புதிய அறிவிப்புகள்
விவசாயிகள்
- பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்க உத்தரவாதம்.இத்திட்டத்திற்காக 2019-20 நிதியாண்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கீடு.
- 2018-19 திருத்திய மதிப்பீட்டில் கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
- ராஷ்ட்ரிய கோகுல் இயக்கத்திற்கான ஒதுக்கீடு ரூ.750 கோடியாக அதிகரிப்பு.
- பசுமாடுகளின்நீடித்த இனவிருத்தி மேம்பாட்டிற்காக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
- 1.5 கோடி மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துக்கென தனித்துறை உருவாக்கப்படும்.
- கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடனுக்கு 2% வட்டி தள்ளுபடி ; கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு கூடுதலாக 3 சதவீத வட்டி சலுகை.
- பேரிடர் காலத்தில் வழங்கப்படும் 2 சதவீத வட்டி தள்ளுபடி, தற்போது திருத்தியமைக்கப்பட்ட கடன் காலம் முழுவதற்கும் வழங்கப்படும்.
- 22 வகையான பயிர்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவை விட குறைந்த்து 50% கூடுதல் விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்.
- கடந்த 5 ஆண்டுகளில் வட்டி தள்ளுபடி 2 மடங்கு அதிகரிப்பு.
- மண்வள சுகாதார அட்டை, வேப்பஞ்சாறு தடவிய யூரியா உரம் போன்றவை வேளாண் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
தொழிலாளர்
- அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள 10 கோடி தொழிலாளர்களுக்கு நிலையான மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தன் திட்டம்
- மாதம் ரூ.100/55 என்ற குறைந்த அளவிலான பங்களிப்பைச் செலுத்தும் தொழிலாளர்கள் 60 வயதை கடந்த பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
- வேலை வாய்ப்புகள் விரிவாக்கம் ; தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர் எண்ணிக்கை 2 கோடி அதிகரிப்பு
- அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச வருமானம் கடந்த ஐந்தாண்டுகளில் 42% உயர்வு.
சுகாதாரம்
- 22ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
- 2019-20ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
நேரடி வரிகள்
- ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்கு.
- நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த 3 கோடி வரி செலுத்துவோருக்கு ரூ.23,000 கோடிக்கு மேல் வரிச்சலுகை.
- வருமானவரிக்கான நிரந்தரக் கழிவுத்தொகை ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்படும்.
- வங்கி / அஞ்சலக முதலீடுகள் மூலம் வட்டியாக பெறப்படும் தொகைக்கு வரிச்சலுகை பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.10,000-லிருந்து ரூ.40,000-ஆக அங்கீகரிக்கப்படும்.
- தற்போதுள்ள வருமானவரி வீதங்கள் தொடரும்.
- சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 2-ஆவது வீட்டிற்கான நியாயமான வாடகைக்கும் வரிவிலக்கு. வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு ஊக்கமளிக்கப்படும்.
- மாத சம்பளம் பெறுவோர் செலுத்தும் வீட்டு வாடகைக்கான வரிச்சலுகைக்கான உச்சவரம்பு ரூ.1,80,000-லிருந்து ரூ.2,40,000-ஆக உயர்த்தப்படும்.
- ஒரு சொந்த குடியிருப்புக்கான முதலீடு மூலம் பெறப்படும் ஆதாயங்களுக்கான சலுகை 2 வீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.2 கோடி வரையிலான தொகைக்கும் நீட்டிக்கப்படும்.
- குறைந்த முதலீட்டிலான வீடு வாங்குவோருக்கு, வருமானவரிச் சட்டம் 80 IBA-யின் கீழ் வழங்கப்படும் வரிச்சலுகை 2020 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும்.
- நியாயமான வாடகை, விற்பனை செய்யப்படாத தளவாடங்களுக்கான வரி விலக்கு காலம், ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
நிதித் திட்டங்கள்
- 2019-20-க்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 3.4%ஆக இருக்கும்.
- 3% நிதிப்பற்றாக்குறை என்ற இலக்கு 2020-21-ல் எட்டப்படும்.
- 7 ஆண்டுகளுக்கு முன் 6%ஆக இருந்த நிதிப்பற்றாக்குறை 2018-19 திருத்திய மதிப்பீட்டில் 3.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- அரசின் மொத்த செலவீனம் 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் 13% அதிகரித்து ரூ.27 லட்சத்து 84 ஆயிரத்து 200 கோடியாக உள்ளது.
- 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் மூலதன செலவினம் ரூ.3,36,292 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2019-20-ல் ரூ.3,27,679 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தேசிய கல்வி இயக்கத்திற்கான ஒதுக்கீடு 2019-20-ல் 20% அதிகரிக்கப்பட்டு ரூ.38,572 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஒதுக்கீடு 2019-20-ல் 18% அதிகரிக்கப்பட்டு ரூ.27,584 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கான ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 2018-19ல் ரூ.56,619 கோடியாக இருந்த ஷெட்யூல்டு வகுப்பினருக்கான ஒதுக்கீடு 35.6% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.76,801 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 2018-19-ல் ரூ.39,135 கோடியாக இருந்த ஷெட்யூல்டு பழங்குடியினருக்கான ஒதுக்கீடும் 28% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.50,086 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பங்கு விலக்கல் மூலம் ரூ.80,000 கோடி திரட்டுவது என்ற இலக்கை அடைய முடியும் என அரசு நம்புகிறது.
- கடன் ஒருங்கிணைப்பை நிதிப்பற்றாக்குறையுடன் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு அரசு கவனம் செலுத்தும்.
ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
“நாட்டில் உள்ள வளங்களை பயன்படுத்துவதற்கான முதல் உரிமை ஏழைகளுக்குத்தான் உண்டு” : நிதியமைச்சர்
- பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த கல்விநிறுவனங்களில் கூடுதலாக 25% இடங்கள் உருவாக்கப்படும்.
- நகர்ப்புற – கிராமப்புற இடைவெளியை ஈடுகட்டவும், கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் இலக்குடன் கூடிய செலவீனம்
- மின்சார வசதியை பெற விரும்பும் அனைத்து வீடுகளுக்கும் 2019 மார்ச்சுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்
- பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு.
- சௌபாக்யா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின் இணைப்பு.
- உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத்திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுமார் 50 கோடி மக்களுக்கு பயனளிக்கும்.
- மிகவும் பின்தங்கியிருந்த 115 மாவட்டங்களின் மேம்பாட்டிற்கு, விருப்ப மாவட்டங்கள் திட்டம்.
- 2018-19-ல் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு உணவு தானியங்களை குறைந்த விலையில் வழங்க 2018-19-ல் ரூ.1,70,000 கோடி செலவு.
- தனியார் துறை ஒத்துழைப்புடன் 143 கோடி எல்இடி மின் விளக்குகள் விநியோகம்.
- எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் ஏழை & நடுத்தர வகுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வரை சேமிப்பு
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 10 லட்சம் நோயாளிகள் இலவச சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
- ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு மருந்துப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க ஏதுவாக மக்கள் மருந்தக திட்டம்
- 2014 முதல் அறிவிக்கப்பட்ட 21 எயம்ஸ் மருத்துவமனைகளில் தற்போது 14 மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
- பிரதமரின் கிராமச்சாலை திட்டத்தின் கீழ், அமைக்கப்படும் கிராமப்புற சாலைகளின் அளவு மும்மடங்காக அதிகரிப்பு.
- 17.84 லட்சம் குடியிருப்புகளில் 15.80 லட்சம் குடியிருப்புகளுக்கு முறையான சாலை இணைப்பு
- பிரதமரின் கிராம சாலை திட்டத்திற்கு 2018-19 திருத்திய மதிப்பீட்டில் ரூ.15,500 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019-20-ல் ரூ.19 ஆயிரம் கோடியாக நிர்ணயம்.
- 2014-18 காலக்கட்டத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 1.53 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
வடகிழக்கு
- 2018-19 நிதி ஒதுக்கீட்டில் 21% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.58,166 கோடியாக நிர்ணயம்
- அருணாச்சலப்பிரதேச மாநிலம் அண்மையில் விமான போக்குவரத்து வசதியை பெற்றுள்ளது.
- மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்கள் முதன்முறையாக இந்தியாவின் ரயில்வே வரைப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
- பிரம்மபுத்திரா ஆற்றில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தி சரக்குப்போக்குவரத்து தொடங்கப்படும்.
ஒடுக்கப்பட்ட பிரிவினர்
- இதுவரை அடையாளம் காணப்படாத சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினரை அடையாளம் காண நிதி ஆயோக்கின் கட்டுப்பாட்டில் புதிய குழு ஒன்று உருவாக்கப்படும்.
- சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினர் மேம்பாடு மற்றும் நலனுக்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் புதிதாக நலவாழ்வு மேம்பாட்டு வாரியம் ஒன்று உருவாக்கப்படும்.
பாதுகாப்பு
- முதன் முறையாக ராணுவத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,00,000 கோடியை தாண்டியுள்ளது.
ரயில்வே
- 2019-20 நிதிநிலை அறிக்கையில் மூலதன ஆதரவு ரூ.64,587 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்த மூலதனச் செலவு ரூ.1,58,658 கோடியாக இருக்கும்.
- 2017-18-ல் 98.4%-ஆக இருந்த செயல்பாட்டு செலவீனம் 2018-19 திருத்திய மதிப்பீட்டில் 96.2%ஆகவும், 2019-20 நிதி நிலை அறிக்கையில் 95%ஆகவும் இருக்கும்.
பொழுதுபோக்கு தொழில்
- இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒற்றைச் சாளர அனுமதியைப் பெறவும், படப்பிடிப்பை எளிதாக்கவும் நடவடிக்கை.
- தாமாக முன்வந்து வருவாயை தெரிவிக்க ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்படும்.
- திருட்டு வீடியோவை தடுக்க திரைப்பட சட்டங்களில் புதிய பிரிவுகள் சேர்க்கப்படும்.
குறு, சிறு, நடுத்தர தொழில் மற்றும் வணிகர்கள் நலன்
- ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்த சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெறும் ரூ.1 கோடி வரையிலான கடனுக்கு 2% வட்டி தள்ளுபடி.
- சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து 25%
- அளவிற்கு கொள்முதல் செய்யப்படும் அரசு அமைப்புகளுக்கு தேவைப்படும் பொருட்களில் 3% பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களிடமிருந்துதான் வாங்கப்படுகிறது.
- உள்நாட்டு வர்த்தகத்திற்கு மீண்டும் முன்னுரிமை ; தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை என பெயர்மாற்றம் செய்யப்படும்.
- ஒரு மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி வரை கடன் வசதி பெற ஏற்பாடு.
- அரசு மின்னணு சந்தை திட்டத்தால் சராசரியாக 25%-28% சேமிப்பு.
டிஜிட்டல் கிராமங்கள்
- நாட்டில் உள்ள 1 லட்சம் கிராமங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்.
பிற முக்கிய அறிவிப்புகள்
- செயற்கைப் புலனாய்வுக்கான தேசிய திட்டத்திற்கு உறுதுணையாக செயற்கைப் புலனாய்வு நுழைவாயில் ஒன்று புதிதாக ஏற்படுத்தப்படும்.
2014 -2019 சாதனைகள்
பொருளாதார நிலை
- கடந்த 5 ஆண்டுகளில் உலகப்பொருளாதாரத்தில் இந்தியா சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
- “2014-19 காலக்கட்டத்தில் நாட்டின் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையில் நாடு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது” – நிதியமைச்சர்.
- 2013-14ல் உலகின் 11-ஆவது பெரிய நாடாக இருந்த இந்தியா தற்போது 6-வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
- 2014-19 காலக்கட்டத்தில் நாட்டின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரி, 1971-க்குப்பிறகு அமைந்த எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
- நாட்டின் அச்சாணியை சீர்குலைக்கும் வகையில் இருந்த பணவீக்கம், 2009-14 காலக்கட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது : நிதியமைச்சர்.
- இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் நாட்டின் சராசரி பணவீக்கம் 4.6%-ஆக குறைந்துள்ளது.
- 2018 டிசம்பரில் பணவீக்கம் 2.19% அளவிற்கு குறைக்கப்பட்டது.
- ஏழாண்டுகளுக்கு முன் 6% ஆக இருந்த நிதிப்பற்றாக்குறை 2018-19ல் திருத்திய மதிப்பீட்டில் 3.4% ஆக குறைக்கப்பட்டது.
- 6 ஆண்டுகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6%ஆக இருந்த நடப்புக்கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 2.5% ஆக உள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் 239 பில்லியன் டாலர் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது.
- “இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்து, வளர்ச்சி மற்றும் வளம் என்ற இலக்கை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது” - நிதியமைச்சர்
- உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்திய உருவெடுத்துள்ளது.
- இரட்டை இலக்க பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு நிதிச்சமன்பாடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
- அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் தளர்த்தப்பட்டு, பெருமளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் தானியங்கி முறையிலேயே வருகின்றன.
மகளிர் மேம்பாடு என்ற நிலையிலிருந்து மகளிர் தலைமையில் மேம்பாடு
- உஜ்வாலா திட்டத்தின்கீழ் 6 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது ; அடுத்த ஆண்டுக்குள் 8 கோடி குடும்பங்களுக்கும் எரிவாயு இணைப்பு.
- முத்ரா கடனில் 70% பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பேறு கால விடுப்பு 26 வாரங்களாக நீட்டிப்பு.
- பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி
இளைஞர் நலன்
- பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி.
- முத்ரா. நிமிர்ந்திடு இந்தியா மற்றும் தொடங்கிடு இந்தியா திட்டங்களின் கீழ் சுய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
வருமான வரி
- 2013-14ல் ரூ.6.38 லட்சம் கோடியாக இருந்த வரி வசூல் கடந்த ஐந்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு இந்த ஆண்டு ரூ.12 லட்சம் கோடியாக உள்ளது.
- 3.79 கோடியாக இருந்த வரிச்செலுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 80% அதிகரித்து 6.85 கோடியாக உள்ளது.
- வரி நிர்வாகம் சீரமைப்பு – கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்குகளில் 99.54% ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- வரி செலுத்துவோருக்கு உகந்த நடைமுறையை மேம்படுத்த தொழில்நுட்ப முனைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக வருமானவரி கணக்குகள் 24 மணி நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, திருப்பி அளிக்க வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்பட்டது.
- நடுத்தர வகுப்பினருக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சலுகைகள் –
- அடிப்படை வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்வு
- ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வரிக்கட்டமைப்பு உள்ளவர்களுக்கான வரி 10%லிருந்து 5% ஆக குறைப்பு
- மாத ஊதியம் பெறுவோருக்கான நிரந்தர கழிவுத்தொகை ரூ. 40,000.
- 80 சி பிரிவின் கீழ் சேமிப்புகளுக்கான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிப்பு.
- சொந்த பயன்பாட்டில் உள்ள வீட்டு கடனுக்கான வட்டிக்கான சலுகை வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிப்பு.
- சிறு தொழில்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் –
- ஒட்டுமொத்த நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன.
- தொழில்களுக்கான உத்தேச வரிவிதிப்பு வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்வு.
- உத்தேச வரிவிதிப்பின் பலன்கள் முதன் முறையாக சிறிய அளவிலான தொழில்துறையினருக்கும் விரிவுபடுத்தப்பட்டு, இதற்கான உச்சவரம்பு ரூ.50 லட்சமாக நிர்ணயம்.
- குறைந்த அளவிலான ரொக்க பரிமாற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், உத்தேச லாப விகிதம் 8%-லிருந்து 6%-ஆக குறைப்பு.
- 99% தொழில் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு 25% அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி
- சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவை பொது சந்தையாக மாற்றியுள்ளது.
- ஜிஎஸ்டி காரணமாக வரி வருவாய்க்கான அடித்தளம் அதிகரித்திருப்பதோடு, வரி வருவாய் அதிகரித்து வர்த்தகமும் எளிமைக்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து விரைவாகவும், மிகவும் திறமையாகவும் பிரச்சினைகள் இல்லாமலும் நடைபெற்று வருகிறது.
- தினமும் பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கான வரி பூஜ்யம் சதவீதம் முதல் ஐந்து சதவீதம் என்ற அளவிற்குள் குறைக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் சேவை அளிப்போருக்கு உதவி
- 40 லட்சம் ரூபாய் வரை சிறு வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு
- 1.5 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் சிறு வர்த்தகத்திற்கு ஒரு சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படும். இந்தப்பிரிவில் வருவோர் வருடத்திற்கு ஒருமுறை வரிப்படிவம் தாக்கல் செய்தால் போதுமானது.
- சிறு சேவைகள் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் 18 சதவீதத்திற்கு பதிலாக 6 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தினால் போதும்.
- ஜிஎஸ்டி வரி செலுத்தும் 90 சதவீதம் பேர் 3 மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்தும் படிவம் தாக்கல் செய்வது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
- நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் சராசரியாக 97 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக உள்ளது. இது, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஆண்டு இருந்த 89 ஆயிரத்து 700 கோடி ரூபாயை விட கூடுதல்.
கட்டமைப்பு
சிவில் விமானப்போக்குவரத்து – உடான் திட்டம்
- செயல்பாட்டில் உள்ள விமானநிலையங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
- அண்மையில் சிக்கிமில் பாக்யாங் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
சாலைகள்
- உலகிலேயே நெடுஞ்சாலை மேம்பாட்டில் விரைந்து செயல்படும் நாடு இந்தியா.
- ஒவ்வொரு நாளும் 27 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைப்பு.
- தடைப்பட்டுக் கிடந்த தில்லியைச் சுற்றியுள்ள கிழக்குப்புற நெடுஞ்சாலை மற்றும் அசாம் அருணாச்சலப் பிரதேசத்திற்கான போகிபில் ரயில் மற்றும் சாலைப்பாலம் முடிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்போக்குவரத்து
- கடலோரப் பகுதிகளில் சாகர்மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- முதல் முறையாக கொல்கத்தாவிலிருந்து வாரணாசிக்கு நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குப் பெட்டக போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.
இரயில்வே
- இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த ஆண்டு பாதுகாப்பானது.
- அகல ரயில்பாதையில் இருந்த அனைத்து ஆளில்லா லெவல் கிராங்சிகுகள் அகற்றப்பட்டுள்ளன.
- உள்நாட்டிலேயே உருவாக்கி தயாரிக்கப்பட்ட அதிநவீன வந்தேபாரத் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்.
பருவநிலை மாற்றம்
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவது.
- இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மற்றும் அரசுகளுக்கு இடையிலான சூரியசக்தி அமைப்பு.
- கடந்த ஐந்தாண்டுகளில் சூரியசக்தி உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு
- இந்தத் துறையில் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள்
டிஜிட்டல் இந்தியா புரட்சி
- குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை அளிக்க 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுசேவை மையங்கள்
- மொபைல் டேட்டா பயன்பாட்டில் உலகில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
- கடந்த 5 ஆண்டுகளில் மொபைல் டேட்டா மாதாந்திர நுகர்வு 50 சதவீதம் அதிகரிப்பு
- இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் செல்பேசி மற்றும் அதற்குண்டான பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்
- 2-லிருந்து 268-ஆக உயர்வு, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.
மக்கள் நிதி – ஆதார் – கைபேசி மற்றும் நேரடி பயன் பரிமாற்றம்
- கடந்த 5 ஆண்டுகளில் 34 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் துவக்கம்.
- ஆதார் திட்டம் முழுமையாக செயல்பாடு
- இடைத்தரகர் இல்லாமல் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்ப்பு.
சுங்கம் மற்றும் எல்லையோர வர்த்தகம்
- சுங்கம் மற்றும் எல்லையோர வர்த்தகம்
- 36 மூலதன பொருட்களுக்கு சுங்கவரி நீக்கம்
- இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்
- ஊழலை ஒழிக்க முற்றிலும் வெளிப்படைத் தன்மை
- ரேரா மற்றும் பினாமி சட்டம், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவந்துள்ளது.
- தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018, பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வழி ஏற்படுத்தியுள்ளது.
- நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடுகள் வெளிப்படைத் தன்மையுடன் ஏலம் விடப்பட்டுள்ளது.
கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை
- கருப்பு பண சட்டம், தப்பியோடும் குற்றவாளிகள் சட்டம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு, வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- பினாமி சொத்துகள் 6900 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
- நேரடி வரி வருவாய் வளர்ச்சி 18 சதவீதமாக உயர்வு
வங்கி சீர்திருத்தங்கள், நொடித்துப் போன மற்றும் திவால் குறித்த விதிகள்
- நொடித்துப் போன மற்றும் திவால் குறித்த விதிகள், இது தொடர்பான பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்க்க உதவியுள்ளது.
- தொலைபேசி வங்கி சேவை கலாச்சாரத்தை அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
- அங்கீகாரம், தீர்வு, மறு மூலதனம் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற நான்கு கோட்பாடுகளை அரசு கடைபிடிக்கிறது.
- நேர்மையான வங்கியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உறுதிசெய்துள்ளது.
- வங்கிகளுக்கு உண்டான 3 லட்சம் கோடி ரூபாயை அரசு ஏற்கனவே வசூலித்துள்ளது.
- பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனத்தில் அரசு 2.6 லட்சம் கோடி ரூபாயை மூலதனம் செய்துள்ளது.
தூய்மை
- மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு தினத்தையொட்டி தூய்மை இந்தியா இயக்கத்தை மத்திய அரசு துவக்கியது.
- தூய்மை இந்தியா இயக்கத்தை ஒரு தேசிய புரட்சியாக மாற்றியதற்கு 130 கோடி இந்தியர்களுக்கு நிதியமைச்சர் நன்றி.
- கிராமப்புற சுகாதாரம் 98 சதவீத அளவை எட்டியுள்ளது.
- 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடத்திலிருந்து விடுதலை.
பாதுகாப்பு
- ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்பட்டு, ஏற்கனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது.
- ராணுவ சேவை படி உயர்வு.
2019-20 இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
- 2022 ஆம் ஆண்டு வாக்கில் புதிய இந்தியாவை நிர்மாணிப்பது.
- தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது அனைவருக்கும் குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதிகள் அனைத்தும் அளிப்பது.
- விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது.
- இளைஞர்கள் மற்றும் பெண்களின் கனவுகளை நனவாக்க வாய்ப்புக்கள்.
- பயங்கரவாதம், மதவாதம், ஜாதீய வாதம், ஊழல் இல்லாத சுதந்திரமான இந்தியாவை உருவாக்குவது.
- அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம்.
- கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
- அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும்.
- அதற்குப்பின், 8 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்முயற்சி எடுப்பது.
- 2030-ஆம் ஆண்டு இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை
- இந்தியா நவீன தொழில்நுட்ப, உயர்ந்த வளர்ச்சி மற்றும் சமத்துவ, வெளிப்படையான சமூக அமைப்புடன் திகழும்.
- மக்கள் எளிதாக வாழ தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது.
- மின்னணு இந்தியாவை உருவாக்க அரசு செயல்பாடுகளை மின்னணு மயமாக்குவதற்கு இளையோர்களை பயன்படுத்துவது.
- மின்னணு வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் செயல்படும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி, இந்தியாவை மாசு இல்லாத நாடாக மாற்றுவது.
- நவீன மின்னணு தொழில்நுட்பங்களை கிராமப்புற தொழில்மயமாக்கலில் பயன்படுத்தி பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது.
- தூய்மையான ஆறுகள், அனைத்து இந்தியர்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நுண்ணீர் பாசனம் மூலமாக நீர்வளத்தை திறமையாகப் பயன்படுத்துவது.
- சாகர்மாலா திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்துவது, கடலோர மற்றும் கடல் நீரை இந்தியாவின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது.
- ககன்யான் விண்வெளித் திட்டம் மூலம் உலகில் இந்தியாவை செயற்கைக் கோள் ஏவுதளமாக உருவாக்குவது மற்றும் 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி வீரரை பயணிக்கச் செய்வது.
- உணவு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வது உலக உணவு தேவையை பூர்த்தி செய்ய ஏற்றுமதி செய்வது மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாடு இல்லாமல் உணவு உற்பத்தி செய்வது.
- ஆயுஷ்மான் பாரத் மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது, பெண்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கு ஏற்ப சம உரிமைகளைப் பெறுவது.
- இந்தியாவை குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிர்வாகம் மாற்றுவதோடு பொறுப்புள்ள சாதகமான வகையில் செயல்படும் அதிகாரவர்க்கத்தை ஏற்படுத்துவது.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
ஆணைகள்
ஆய்வு முடிவுகள்
ஆலயம்
ஆன்மீகம்
இன்டர்ன்ஷிப்
உடல்நலம்
உதவித்தொகை
ஊதிய உயர்வு
ஊதிய முரண்பாடு
எண்ணும் எழுத்தும்
எப்படி
ஏப்ரல்
ஏழுமலையான் கோவில்
ஓய்வூதியர்கள்
கல்வி
கலந்தாய்வு
களஞ்சியம்
கிரிவலம்
சிறார் திரைப்படம்
செப்டம்பர்
செய்திகள்
செய்திகள் மருத்துவம்
செயல்முறைகள்
செயலிகள்
சேமிப்பு
சேர்க்கை அறிவிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டம்
தரிசன டிக்கெட்
திருப்பதி
திருவண்ணாமலை
தேர்தல்
தேர்வு
தேர்வு முடிவுகள்
தேர்வுகள்
நடத்தை விதிகள்
நவம்பர்
நாட்காட்டி
நுழைவுச்சீட்டு
படிகள் (Allowance)
பணி
பணிப்பயிற்சி
பள்ளி
பள்ளிகள்
புத்தகங்கள்
போட்டி தேர்வுகள்
போட்டிகள்
போராட்டம்
போலியோ
பௌர்ணமி
மருத்துவம்
மாணவர்கள்
மார்ச்
மாற்றுத்திறனாளிகள்
முதலீடு
முன்னுரிமை பட்டியல்
மே
வங்கி
வரலாறு
வலைதளங்கள்
விடுப்பு
விண்ணப்பங்கள்
விண்ணப்பம்
விருதுகள்
விழிப்புணர்வு
வீடியோ
வேலை வாய்ப்பு
ஜனவரி
ஜூலை
ஜூன்
after 10
after+2
CBSE
cps
CRC
CUET
Digital
EMIS
Entrance exam
IBPS
IFHRMS
LIC
NTA
SCERT
SGT
SMC
SOS
SSC
SSLC
Tax
TET
TNPSC
TNUSRB
TPD
Training
TRB
Worksheet
Workshop
மேலும் காட்டு
குறைவாகக் காட்டு
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile
தகவல் அறியும் உரிமை சட்டம்
முக்கிய இணையதளங்கள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழக அரசு இணையதளங்கள்
Translate
Shopping
Missed call banking
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தொடர்பு படிவம்
University's
Intresting Websites
!->



கருத்துகள்
கருத்துரையிடுக
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
* வாசகர்களின் கருத்துகளுக்கு newsthagaval.blogspot.com பொறுப்பேற்காது.
* கருத்தை தணிக்கை செய்யவும், நாகரிகமற்ற, பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.