அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2021
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு - செல்போன் செயலி பயன்படுத்தப்படும். இப்பணி உலகின் மிகப்பெரிய பணியாக இருக்கும்.2021 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல்திட்டம் மற்றும் வினா பட்டியல் குறித்து தரவு உபயோகிப்பாளர் மாநாட்டில் ஆலோசனை
இந்தியாவில் 140 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் முதன்முறையாக, புள்ளி விவரங்கள் அனைத்தும் செல்போன் செயலி மூலமாக பெறப்படவுள்ளதென இந்திய மக்கள் தொகை பதிவாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல் திட்டம் மற்றும் வினாப்பட்டியலை இறுதி செய்வதற்காக, புதுதில்லியில் இன்று நடைபெற்ற தரவு உபயோகிப்பாளர் மாநாட்டில் பேசிய அதிகாரிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள கணக்கெடுப்பாளர்கள், அவரவர் சொந்த செல்போனை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இதற்காக அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கணக்கெடுப்பாளர்கள் காகித அட்டவணைகள் மூலமாக புள்ளி விவரங்களைப் பெற்று அதனை மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்க வகை செய்யப்படும் என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி உலகின் மிகப்பெரிய பணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை செயலாளர் திரு. ராஜீவ் கவ்பா, கணக்கெடுப்புப் பணியில் 33 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரிலும் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப்பிரதேசங்களிலும் 2020 அக்டோபர் ஒன்றாம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு கணக்கெடுப்புப்பணி தொடங்கும் என்றும் நாட்டின் பிற பகுதிகளில் 2021 மார்ச் 1ஆம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு இந்தப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மனித தலைகளை கணக்கெடுப்பது மட்டுமல்ல என்று குறிப்பிட்ட திரு. ராஜீவ் கவ்பா, கொள்கை வகுத்தல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான சமூகப் பொருளாதார புள்ளி விவரங்களை திரட்டுவதாகவும் இருக்கும் என்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இவை தவிர, தொகுதி மறுவரையறை மற்றும் எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு போன்ற அரசியல் சாசன தேவைகளுக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என திரு. ராஜீவ் கவ்பா தெரிவித்தார்.
மாநாட்டில் வரவேற்புரையாற்றிய இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் திரு. விவேக் ஜோஷி, 2021 மக்களவை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது என்றார். முதற்கட்டமாக, 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் மாநில அரசுகளால் தேர்வு செய்யப்படும் ஏதாவது இரண்டு மாதங்களில் வீடுகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்டமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2021 பிப்ரவரி 9 முதல் 28 தேதி வரையிலும், திருத்தப்பணிகள் 2021 மார்ச் ஒன்றுமுதல் மார்ச் ஐந்தாம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும் திரு. விவேக் ஜோஷி குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீரிலும் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப்பிரதேசங்களிலும் 2020 செப்டம்பர் 11 முதல் 30ஆம் தேதி வரையிலும், திருத்தப்பணிகள் 2020 அக்டோபர் ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
ஆணைகள்
ஆய்வு முடிவுகள்
ஆலயம்
ஆன்மீகம்
இன்டர்ன்ஷிப்
உடல்நலம்
உதவித்தொகை
ஊதிய உயர்வு
ஊதிய முரண்பாடு
எண்ணும் எழுத்தும்
எப்படி
ஏப்ரல்
ஏழுமலையான் கோவில்
ஓய்வூதியர்கள்
கல்வி
கலந்தாய்வு
களஞ்சியம்
கிரிவலம்
சிறார் திரைப்படம்
செப்டம்பர்
செய்திகள்
செய்திகள் மருத்துவம்
செயல்முறைகள்
செயலிகள்
சேமிப்பு
சேர்க்கை அறிவிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டம்
தரிசன டிக்கெட்
திருப்பதி
திருவண்ணாமலை
தேர்தல்
தேர்வு
தேர்வு முடிவுகள்
தேர்வுகள்
நடத்தை விதிகள்
நவம்பர்
நாட்காட்டி
நுழைவுச்சீட்டு
படிகள் (Allowance)
பணி
பணிப்பயிற்சி
பள்ளி
பள்ளிகள்
புத்தகங்கள்
போட்டி தேர்வுகள்
போட்டிகள்
போராட்டம்
போலியோ
பௌர்ணமி
மருத்துவம்
மாணவர்கள்
மார்ச்
மாற்றுத்திறனாளிகள்
முதலீடு
முன்னுரிமை பட்டியல்
மே
வங்கி
வரலாறு
வலைதளங்கள்
விடுப்பு
விண்ணப்பங்கள்
விண்ணப்பம்
விருதுகள்
விழிப்புணர்வு
வீடியோ
வேலை வாய்ப்பு
ஜனவரி
ஜூலை
ஜூன்
after 10
after+2
CBSE
cps
CRC
CUET
Digital
EMIS
Entrance exam
IBPS
IFHRMS
LIC
NTA
SCERT
SGT
SMC
SOS
SSC
SSLC
Tax
TET
TNPSC
TNUSRB
TPD
Training
TRB
Worksheet
Workshop
மேலும் காட்டு
குறைவாகக் காட்டு
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile
தகவல் அறியும் உரிமை சட்டம்
முக்கிய இணையதளங்கள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழக அரசு இணையதளங்கள்
Translate
Shopping
Missed call banking
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தொடர்பு படிவம்
University's
Intresting Websites
!->


