WELCOME TO NEWS THAGAVAL

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள - முதியவர்களுக்கு


கொரோனா (கோவிட் 19) நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வயது முதிர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை செய்யக்‌ கூடாதவை (ஆரோக்கியத்துக்கான அறிவுறுத்தல்கள்)


கோவிட் 19 நோய்த் தொற்று பரவும் காலத்தில், இந்தியாவில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு ஆரோக்கியத்துக்கான அறிவுறுத்தல்கள்



உலக அளவில் கோவிட்-19 ஏராளமான உயிர்களைப் பலி வாங்கியதுடன், பாதிக்கும் பகுதிகளை அதிகரித்துக் கொண்டே போகிறது. கோவிட் - 19 பரவுதலைத் தடுக்க, முடக்கநிலை அமல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நோய் பரவக் கூடிய சங்கிலித் தொடரில் பிணைப்புகளை உடைப்பதற்காக, அரசு வழங்கியுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியமான செயல்பாடாக உள்ளது.

வயது முதிர்ந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும், உடலில் சேமித்து வைத்துள்ள சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள் போன்ற இதர பல வகை கோளாறுகள் காரணமாகவும், இவர்களுக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  வயது முதிர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அதன் தாக்கம் தீவிரமாக மாறி அதிக அளவில் மரணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம்.



இருந்தபோதிலும் வயது முதிர்ந்தவர்கள் பின்வரும் வகையில் நடந்து கொண்டால், நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைத்துக் கொள்ளலாம்:

செய்ய வேண்டியவை :-

  • வீட்டிலேயே இருங்கள். வீட்டுக்கு வருபவர்களை சந்திப்பதைத் தவிர்த்திடுங்கள். சந்திப்பது கட்டாயம் என்றால், ஒரு மீட்டர் இடைவெளியைப் பராமரித்திடுங்கள்.
  • அடிக்கடி கைகளையும் முகத்தையும் சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவிடுங்கள்.
  • தும்மல், இருமல் வந்தால் முழங்கை இடைவெளியில் செய்யுங்கள் அல்லது திசு காகிதம் / கைக்குட்டை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள். தும்மிய பிறகு அல்லது இருமிய பிறகு அந்தத் திசு காகிதத்தை முறையாக அகற்றவும், கைக்குட்டையை துவைக்கவும்.
  • வீட்டிலேயே சமைக்கப்பட்ட, சத்துக்கள் மிகுந்த சூடான உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள். அடிக்கடி நீர்மங்களைக் குடிக்கவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க அப்போது தயாரித்த பழச்சாறுகள் குடியுங்கள்.
  • உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்.
  • உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மருந்துகளை வழக்கம்போல எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் குடும்பத்தினருடன் (உடன் தங்கியிராதவர்கள்) தொலைபேசி அல்லது விடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுங்கள். இதில், தேவைப்பட்டால் குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள்.
  • கண்புரை நீக்கம் அல்லது கால் மூட்டு மாற்றுதல் என தள்ளிவைக்கக் கூடிய அறுவை சிகிச்சைகள் எதற்காவது ஏற்பாடு செய்திருந்தால், அவற்றைத் தள்ளிப் போடுங்கள்.
  • அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
  • உங்கள் உடல் நலனை கவனியுங்கள். காய்ச்சல், இருமல் மற்றும் / அல்லது சுவாசக் கோளாறு வந்தால், உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தை நாடுங்கள், அங்கே அளிக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

செய்யக் கூடாதவை :-

  • உங்களுடைய வெறும் கைகளுக்கு நடுவிலோ அல்லது முகத்தை மூடாமலோ இருமவோ, தும்மவோ கூடாது.
  • உங்களுக்குக் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், உங்களின் தொடர்பாளர்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்.
  • உங்கள் கண்கள், முகம், மூக்கு, நாக்கை தொட வேண்டாம்.
  • நோய் பாதித்த / உடல் நலிவுற்றவர்கள் அருகில் செல்ல வேண்டாம்.
  • நீங்களாக (டாக்டர் பரிந்துரை இல்லாமல்)  மருந்து எடுத்துக் கொள்ளாதீர்கள்.
  • உங்கள் நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் கை குலுக்கவோ அல்லது கட்டி அணைக்கவோ செய்யாதீர்கள்.
  • வழக்கமான மருத்துவ ஆலோசனைகள் அல்லது தொடர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். முடிந்த வரையில் உங்களுக்கு ஆரோக்கிய சேவை அளிப்பவருடன் தொலைபேசி மூலம் ஆலோசனை பெற முயற்சியுங்கள்.
  • பூங்காக்கள், மார்க்கெட்கள் மற்றும் மத சம்பந்தமான  இடங்கள் என கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லாதீர்கள்.
  • மிகவும் அவசியம் என்று இருந்தால் தவிர வெளியில் செல்லாதீர்கள்.

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *