WELCOME TO NEWS THAGAVAL

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-21ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலுக்கான பாதை வரைபடத்தை வெளியிடுகிறது


ஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அடித்தள எழுத்தறிவு, எண் கற்றல் பணி அமைப்பதற்கான முடிவைக் கருத்தில் கொண்டும், மற்றும் கற்றல் வெளிச் செல்லும் மைய அணுகுமுறையை நோக்கி சமாக்ரிக்ஷாவின் கவனத்தைக் கருத்தில் கொண்டும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் தேவையான அடிப்படைகளை உருவாக்கி இவற்றைத் திறம்பட சரியான நேரத்தில் செயல்படுத்துவது அவசியம், இது கற்றல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் நிலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் 2020-21ஆம் ஆண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் பின்வரும் பணிகளை மேற்கொள்ளுமாறு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின், பள்ளிக்கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை வெளியிட்டுள்ளது.

கற்பிக்கும் முறைகள் The Learning Outcomes (LOs)
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 1-10 வகுப்புகளுக்கான கற்பிக்கும் முறைகளை செயல்படுத்த:
ஒவ்வொரு பாடங்களையும் விளக்கும் விளக்கப்படங்கள் / சுவரொட்டிகள் / விளக்கக்காட்சிகள், ஒவ்வொரு பாடத்திற்கும், 1 முதல் 5 வரையிலான ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 2020 அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்;  6 முதல் 12 வகுப்புகளுக்கு மார்ச் 2021 க்குள் முடிக்கப்பட வேண்டும்.


1 முதல் 5 வகுப்புகளுக்கு ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களுக்கும் இணைய ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முதல் கட்டமாகவும்; 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன், 2021க்குள் இரண்டாம் கட்டமாகவும் முடிக்கப்பட வேண்டும்.


கொவிட் – 19 காரணமாக பள்ளி வந்து கற்க முடியாதவர்களுக்கு முழு பாடத்திட்டத்திற்கும் துணை / மாற்றுக் கல்விகற்றல் பொருளைத் தயாரிக்கவும், குறிப்பாக டிஜிட்டல் / ஆன்லைன் அணுகல் இல்லாதவர்களில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர், 2020க்குள் முதல் கட்டமாகவும், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன், 2021க்குள் இரண்டாம் கட்டமாகவும் தயாரிக்க வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் கற்றதை அளவிட குறைந்தது இரண்டு நிலைகளில் தேர்ச்சி அடையும் வண்ணம், குறைந்தபட்சம் 10 கேள்விகள் இருக்குமாறு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை நவம்பர் 2020க்குள்ளாகவும், இதர வகுப்புகளுக்கு மார்ச் 2021க்குள்ளும் தயாரிக்கப்பட வேண்டும்.

தேசிய சாதனைக் கணக்கெடுப்பு, 2017இன் அடிப்படையில், கடினமான பகுதிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் அடையாளம் கண்டுள்ளது..  கடினமான பகுதிகளைத் தெளிவுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அனைத்து வகுப்பிற்கும் தயாரிக்க வேண்டும்.  1 முதல் 5 வகுப்புகளுக்கு டிசம்பர் 2020க்குள்ளாகவும், மார்ச், 2021க்குள் மீதமுள்ள வகுப்புகளுக்கும் தயாரிக்கப்பட வேண்டும்..


புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF)
பள்ளிக் கல்விக்கான புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பும் (என்.சி.எஃப்) தொடங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலும் புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் படி பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடநெறி வல்லுநர்கள் பள்ளிக்கல்விக்கான இந்த செயல்முறையைத் தொடங்குவதுடன், 2020 டிசம்பருக்குள் இடைக்கால அறிக்கையை வழங்குவார்கள்.

பாடப்புத்தகங்களை மறுவடிவமைப்பு செய்யும் போது, ​​முக்கிய உள்ளடக்கத்தைத் தவிர வேறு எதுவும் பாடப்புத்தகங்களில் சேர்க்கபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பாடப்புத்தகங்களின் அறிவாற்றல் சுமை மிக அதிகம். கூடுதலாக படைப்பு சிந்தனை, வாழ்க்கைத் திறன், இந்திய நெறிமுறைகள், கலை மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற கூடுதல் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். புதிய பாடப்புத்தகங்களின் வடிவமைப்பில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலும் (என்.சி.இ.ஆர்.டி) முன்கூட்டியே வேலை செய்யத் தொடங்கும், இருப்பினும், புதிய பாடப்புத்தகங்கள் புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் (என்.சி.எஃப்) அடிப்படையில் தான் வடிவமைக்கப்படும். புதிய என்.சி.எஃப் மார்ச் 2021 க்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆத்மா நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், பிரதம மந்திரியின் இ-வித்யாவுக்காக, என்.சி.இ.ஆர்.டி, ஸ்வயம் பிரபா அலைவரிசைகளுக்கு (1 வகுப்பு 1 சேனல்) 1 - 12 ஆம் வகுப்புக்கான உள்ளடக்கத்தைத் தயாரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சேனல்களைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *