WELCOME TO NEWS THAGAVAL

மத்திய தேர்வாணையம் - தேர்வு மையம் விருப்பம் தெரிவிக்க அறிவுறுத்தல்


மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணி (முதல்நிலை) & இந்திய வனப்பணி - தேர்வுகள், 2020 தேர்வு மையங்கள் பற்றிய விருப்பத்தைத் தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தல்



மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020 மற்றும் இந்திய வனப்பணித் தேர்வுகள், 2020 தேர்வு மையங்கள் பற்றிய விருப்பத்தைத் தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தல்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020 (இந்திய வனப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020உட்பட),  05.06.2020 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்வுத் திட்டம்/ திருத்தப்பட்ட அட்டவணை-யின்படி, 04.10.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது.

குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020-ஐ (இந்திய வனப் பணி (முதல் நிலை) தேர்வுகள், 2020 உட்பட) எழுதுவோரின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டும்,  தேர்வு மையங்களை மாற்ற விரும்புவதாக, விண்ணப்பதாரர்களிடமிருந்து வரப்பெற்ற வேண்டுகோளின் பேரிலும், தேர்வு மையம் தொடர்பாக, திருத்தப்பட்ட விருப்பத்தைத் தெரிவிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.   இந்த வாய்ப்பு தவிர, குடிமைப்பணி (முதன்மை) தேர்வுகள், 2020 மற்றும் இந்திய வனப் பணி (முதன்மை) தேர்வுகள், 2020-க்கான தேர்வு மையங்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.  தேர்வு மையங்கள் மாற்றம் தொடர்பான விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள், அந்த மையங்களின் கூடுதல்/மேம்படுத்தப்பட்ட திறன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, கூடுதல் விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது திருத்தப்பட்ட விருப்பத்தைப் பதிவு செய்வதற்காக தேர்வாணையத்தின் இணையதளமான https://upsconline.nic.in.,   இரண்டு கட்டங்களாக,  அதாவது, 7 – 13 ஜுலை,2020 (பிற்பகல் 06.00மணி) மற்றும் 20 – 24 ஜுலை, 2020 (பிற்பகல் 06.00 மணி வரை) செயல்பாட்டில் இருககும்.  எனவே, தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ,  தேர்வுமையம் பற்றிய தங்களது விருப்பத்தை, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு மைய மாற்றம் குறித்த விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள்,  “முதலில் விண்ணப்பிப்போருக்கு முதலில் ஒதுக்கீடு” என்ற அடிப்படையில்  பரிசீலிக்கப்படும்,    (தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதோடு, குடிமைப்பணித் தேர்வுகள் (முதல்நிலை)2020 மற்றும் இந்திய வனப் பணித் தேர்வுகள்(முதல்நிலை) 2020 பற்றிய தேர்வு அறிவிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது)   மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் முழு கொள்ளளவை எட்டிவிட்டால், அந்த மையத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்பு நிறுத்தப்படும்.  தங்களது விருப்பப்படி தேர்வு மையம் ஒதுக்கீடு பெற முடியாத விண்ணப்பதாரர்கள், எஞ்சிய தேர்வு மையங்களில் எதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

குடிமைப் பணித் தேர்வு(முதல்நிலை)-க்கான தேர்வு அறிவிக்கை எண்.05/2020-சி.எஸ்.பி.   நாள்:12/02/ மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு, 2020-க்கான தேர்வு அறிவிக்கை எண்.06/2020-இ.வ.ப. நாள்: 12/02/20202020 -இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகள் மற்றும் தகுதிகளில் எந்த மாற்றமும் இல்லை.
இது தவிர,  விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தைத்  திரும்பப் பெற்றுக் கொள்ளவும், தேர்வாணைய இணையதளமான  website https://upsconline.nic.in 1 – 8 ஆகஸ்ட், 2020  வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யலாம்.   குடிமைப் பணித் தேர்வு (முதல்நிலை) 2020-க்கான தேர்வு அறிவிக்கை எண்.05/2020-சி.எஸ்.பி. நாள்: 12/02/2020 மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு 2020-க்கான தேர்வு அறிவிக்கை எண். 06/2020-இ.வ.ப. நாள்:12/02/2020ல் குறிப்பிடப்பட்டுள்ள திரும்பப்பெறுதலுக்கான அனைத்து நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை.   விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தங்களது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால், எதிர்காலத்தில், எத்தகைய சூழ்நிலையிலும்  அதனை புதுப்பிக்க முடியாது.   



(PIB : 1635650)



கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *