WELCOME TO NEWS THAGAVAL

மெய்நிகர் தேசியக் கண்காட்சி

பாரத் பர்வ் என்ற மெய்நிகர் தேசியக் கண்காட்சி

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ‘பாரத் பர்வ்’ என்ற தேசியக் கண்காட்சியை, மத்திய அரசின் சுற்றுலாத்துறை, தில்லி செங்கோட்டை வளாகத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடத்திவருகிறது. ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத் தலங்கள், கைவினைப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

கொவிட் தொற்று சூழல் காரணமாக இந்தாண்டு, பாரத் பர்வ் நிகழ்ச்சியை மெய்நிகர் மூலம் மத்திய சுற்றுலாத்துறை நடத்துகிறது.

இந்த கண்காட்சியில், தேசிய ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது அரங்கத்தை அமைக்கிறது.  தனது நிகழ்ச்சிகள் மூலம் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை வெளிப்படுத்தும். மெய்நிகர் அரங்கத்தின் காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பதிப்பகப் பிரிவும், இந்த மெய்நிகர் கண்காட்சியில் பங்கெடுக்கும். இதில் கலை, கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் குறித்த புத்தகங்கள், நவீன இந்தியாவை உருவாக்கியவர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஒரே பாரதம், உன்னத பாரம் தொடர்களின் புத்தகங்கள் இடம் பெறும். 
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கண்காட்சியில் இடம் பெற்ற போட்டோக்கள், வீடியோக்கள், அனிமேஷன், ஆகியவற்றை பாரத் பர்வ் நிகழ்ச்சிக்கு, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின்  கள தகவல் தொடர்பு அலுவலகம் கொண்டு வருகிறது.  பாரத் பர்வ் நிகழ்ச்சிகளை
www.bharatparv2021.com என்ற இணையம் மூலம் காணலாம்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, நாட்டுப்பற்றையும், நம் நாட்டின் வளமான பன்முக கலாச்சாரத்தையும் பறை சாற்றுவதோடு, இந்தியாவின் சாரம்சத்தைக் கொண்டாடுகிறது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள், பார்த் பர்வ் நிகழ்ச்சியையும், இந்தியாவின் உண்மையான உணர்வையும் www.bharatparv2021.com என்ற இணையளத்தில் கண்டு மகிழமுடியும்


கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *