WELCOME TO NEWS THAGAVAL

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன? என்பதை தெரிந்து கொள்வோம்

(1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)                                    

(2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.                                   

(3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.                      
 
 (4)- பிரிவு 6(3)ன்படி கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி 5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரிய விபரத்தை தெரிவிக்க வேண்டும்.       
                           
(5)- பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள் தகவலை அளித்தல் வேண்டும்.                      

(6)- பிரிவு 7(1)ன்படி உயிர் சம்மந்தப்பட்ட தகவல்கள் ஆனால் 48 மணிநேரத்திற்குள் அளித்தல் வேண்டும்.                                        

(7)- கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வந்து சேரவில்லை என்றால், உங்கள் தகவல் மறுக்கப்படுவதாக அர்த்தம். பிரிவு 7(8)ன்படி மறுப்பதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.                                                            

(8)- பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் கட்டணமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.                                      

(9)- பிரிவு 7(9)ன்படி நீங்கள் கேட்டுள்ளபடி தகவலும் அதுபோல அளிக்கப்பட வேண்டும். 

உதாரணமாக சிடியில் அல்லது நகல் என எப்படி கேட்டாலும் தகவல் அளிக்கப்பட வேண்டும். (ரெக்கார்டுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என பொது தகவல் அலுவலர் கருதினால் உரிய காரணத்தை சொல்லி தர "இவ்வாறு இயலாது.... இவ்வாறு தரலாம்" என கூற வேண்டும்.                                       

 (10)- பிரிவு 8(1)ன்படி நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் மறுக்க முடியாத தகவல்களை அளிக்க வேண்டும்.                

(11)- பிரிவு 19(8) B ன்படி தகவல் முழுமையாக வழங்கப்படாததால் இழப்பீட்டை கோரலாம். இந்த இழப்பீடு கொடுக்க தகவல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.            

(12)- பிரிவு 20(2)ன்படி பொது தகவல் அதிகாரி விண்ணப்பங்கள் பெற மறுத்தாலோ அல்லது தகவல் அளிக்க மறுத்தாலோ தகவல் ஆணையம் பொது தகவல் அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும்.                                                              

 (13)- பிரிவு 20(1)ன்படி தகவல் வழங்காத ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 250 முதல் ரூபாய் 25000 வரை தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்க முடியும்.                                                 

(14)- பிரிவு 3 ன்படி அனைத்து குடிமக்களும் தகவல்களை கேட்கலாம்  அமைப்புகளின் சார்பிலும் கேட்க முடியும்.                                

(15)- பிரிவு 19(1)ன்படி பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவுக்கு 30 நாட்களுக்குள் பதில் வராமல் இருந்தாலோ அல்லது 30 நாட்களுக்குள் பதில் வந்தும் மேல்முறையீடு செய்ய உரிய காரணத்திற்காக நிறுத்தி வைத்திருந்தாலோ பிரிவு 19(5)ன்படி மேல்முறையீடு காலதாமதமாக செய்தாலும் ஏற்க வேண்டும்.

(16)- பிரிவு 19(3)ன்படி மேல்முறையீடு அதிகாரியிடமிருந்து திருப்தியற்ற பதில் வந்தாலோ அல்லது பதில் வராமல் போனாலோ 90 நாட்களுக்குள் தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.              

(17)- பிரிவு 5 ன்படி பொது தகவல் அலுவலரின் பதவி பெயரை கேட்கலாம்.   

 (18)- பிரிவு 27 ன்படி விதிகளை இயற்றிட உரிய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. 

(19)- பிரிவு 21 ன்படி நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.                                                      

(20)- பிரிவு 13 ன்படி பதவி, பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகளை குறிக்கிறது.

தகவல் உரிமை சட்ட கட்டணங்கள்...

தகவல் கட்டணங்கள்

தகவல் உரிமை சட்டம் 2005, நியாயமான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. மேலும், தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம்  தேவைப்பட்டால், எவ்வாறு அத்தொகைக் கணக்கிடப்பட்டு அக்கட்டணம் எட்டப்பட்டது  என்று சுட்டிக்காட்டி,   எழுத்துருவில் விண்ணப்பத்தாரருக்கு தெரிவிக்கப் படுதல் வேண்டும். Sec 7(3)

_ விண்ணப்பதாரர் பொதுத்தகவல் அலுவலரால் விதிக்கப்பட்ட கட்டண நிர்ணய முடிவின் மீது, உரிய மேல்முறையீட்டு துறையிடம் மறுஆய்வு செய்யுமாறு நாடலாம்.Sec 7(3) (b)

வறுமை கோட்டிற்குக்  கீடி வாழ்பவருக்கு, கட்டணம் விதிக்கப்படுதல் கூடாது. Sec 7 (5) 

_ பொதுத்தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்கத்  தவறினால், கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அத்தகவலை வழங்குதல் வேண்டும். Sec 7 (6)

_ இச்சட்டத்தின் 6(1) பிரிவின்படி (See அரசு ஆணை (நிலை) எண்.989, பொதுத் துறை, நாள் 07.10.2005) தகவலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகத்தால் குறித்துரைக்கப்பட்ட கணக்குத் தலைப்பில், ரூபாய்  10/- (ரூபாய்  பத்து மட்டும்) ரொக்கமாகவோ, வரைவு காசோலையாகவோ, கருவூல சீட்டு அல்லது வங்கி வரைவோலையாகவோ  நீதிமன்ற கட்ட ஸ்டாம்ப் மூலமாகவோ சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.

இச்சட்டத்தின்7(1)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால் பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கப்பட்டவாறு கணக்குத்தலைப்பில் சரியான ரொக்க ரசீது வரைவு காசோலை, வங்கி காசோலை

வழியே விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே:-

1. A-4, A- 3 அளவுத்தாளில் எழுதி உருவாக்கப்பட்ட அல்லது படியெடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூபாய் இரண்டு;

2. பெரிய அளவுத் தாளுக்கான படி ஒன்றின் உள்ளபடியான கட்டணம், செலவுத்தொகை;

3. மாதிரிகள் அல்லது மாதிரி படிவங்களுக்கான உள்ள செலவு அல்லது விலை;

4. பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, முதல் ஒரு மணிநேரத்திற்கு, கட்டணம் எதுவும் இல்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது அதன் பின்னம் ரூபாய்  ஐந்து கட்டணம் ஆகும்.

இச்சட்டத்தின் 7(5)ம் பிரிவின்படி தகவல் வழங்குவதற்காக, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களால், பின்வரும் விகிதங்களில் குறித்துரைக்கட்டவாறு கணக்குத்தலைப்பில்

9 சரியான ரொக்க ரசீது, வரைவு காசோலை, வங்கி காசோலை வழியே விதிக்கப்பட்ட கட்டணம்  செலுத்தப்படுதல் வேண்டும். அவை முறையே,

1. மின்னணு வழியிலான டிஸ்கெட்/பிளாப்பி ஒன்றிற்கு ரூபாய்  ஐந்து கட்டணம்;

2. அச்சடித்த படிவத்தில் தகவல் வழங்குகைக்கு வெளியீட்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட  விலை.

(அரசு ஆணை (நிலை) எண்.989, பொதுத் துறை, நாள் 07.10.2005)

(அரசு ஆணை (நிலை) எண்.1012, பொதுத் துறை, நாள் 20.09.2006)
.

தமிழ் நாடு மா நில தகவல் ஆணைய்கத்தின் இனையதளத்தில் கட்டணம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு
2005 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்படி உரிய அரசாங்கமானது, அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன்மூலம் இச்சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான விதிகளை இயற்றலாம். 07.10.2005 ஆம் நாளிட்ட பொது (பணியாளரமைப்பு 1 மற்றும் சட்டமியற்றுதல்) துறையின் 989 ஆம் நிலை எண் 

அரசாணையில், விண்ணப்பக் கட்டணம், ஆவண நகல்களுக்கான கட்டணம், கட்டணம் செலுத்தும் முறை ஆகியவற்றை நிர்ணயித்து, 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 20.09.2006 ஆம் நாளிட்ட பொது (பணியாளரமைப்பு 1 மற்றும் சட்டமியற்றுதல்) 

துறையின் 1012 ஆம் நிலை எண் அரசாணை மற்றும் 20.03.2007 ஆம் நாளிட்ட பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (நி.சீ.3) துறையின் 72 ஆம் நிலை எண் அரசாணையிலும், தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகளில் சில திருத்தங்கள் 17வெளியிடப்பட்டன. 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகளின் சிறப்பியல்புகள் கீழ் வருமாறு:- (அ) இச்சட்டத்தின் 6ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் தகவல் பெறுவதற்கென 

ஒவ்வொரு விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 10/- ரொக்கமாகவோ அல்லது நீதிமன்ற கட்டண வில்லையாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ, அல்லது வங்கி காசோலையாகவோ இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

(ஆ) இச்சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் தகவல் அளிப்பதற்கு, பின்வரும் வீதங்களில் உரிய ரசீதின் பேரில் ரொக்கமாக அல்லது கேட்பு வரைவோலை அல்லது வங்கி காசோலை வாயிலாக கட்டணம் வசூலிக்கப்படும். 

(i) உருவாக்கப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ2/- ( A-4 அல்லது A-3 அளவு தாள் ) 

(ii) பெரியளவிலான தாளின் நகலுக்கான உண்மையான கட்டணத்தொகை அல்லது செலவுத்தொகை,

(iii) மாதிரிகளுக்கு அல்லது மாடல்களுக்கு ஏற்பட்ட செலவு அல்லது அடக்கவிலை.

(iஎ) பதிவுருக்களை ஆய்வு செய்வதற்கு, முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை. அதன் பின்னர் வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் (அல்லது அதன் ஒரு பகுதிக்கும்) கட்டணம் ரூ.5/- 

(இ) 7 ஆம் பிரிவைச் சேர்ந்த (5) உட்பிரிவின் கீழ் தகவல் வழங்குவதற்கு (அதாவது அச்சிடப்பட்ட அல்லது யாதொரு மின்னணு படிவத்தில்) உரிய ரசீதின் பேரில் ரொக்கமாக அல்லது கேட்பு வரைவோலை அல்லது வங்கி காசோலை வாயிலாக பின்வரும் வீதங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்:-

(1) செருகு வட்டு அல்லது நெகிழ்வட்டில் தகவல் வழங்குவதற்கு செருகு வட்டு அல்லது நெகிழ்வட்டு ஒன்றுக்கு ரூ50/- மற்றும் 

(2) அச்சிடப்பட்ட வடிவில் தகவல் வழங்குவதற்கு வெளியீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அல்லது வெளியீட்டின் பகுதிநகலுக்கான ஒளிநகலின் பக்கம் ஒன்றுக்கு ரூ.2/-

(ஈ) 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை ( கட்டணங்கள்) விதிகளின் கீழ் வசூலிக்கப்படவேண்டிய கட்டணத்தொகையானது, பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்தப்படவேண்டும்.

0075-00- பல்வகை பொதுப்பணிகள் பல்வகை பொதுப்பணிகள் -800 ஏனைய வரவுகள் - க்ஷமு தமிழ்நாடு 2005 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமை (கட்டணங்கள்) விதிகளின் கீழ் கட்டணங்கள் வசூலித்தல் "" (த.தொ.கு0075 00 800 க்ஷமு 0006) 

(உ) 2005 ஆம்ஆண்டு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோருபவருக்கு செலுத்தப்பட்ட கட்டணத் தொகையை திரும்பக் கொடுப்பதற்கான கணக்குத்தலைப்பு பின்வருமாறு:- ""0075-00 - பல்வகை பொதுப்பணிகள் - 900 திருப்பி அளிக்கப்பட்ட 900 திருப்பி அளிக்கப்பட்ட தொகையை கழிக்கவும் - ஹநு. 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கட்டணத்தை திருப்பி அளித்தல்"" சட்டத்தின் கீழ் கட்டணத்தை திருப்பி அளித்தல்"" (த.தொ.கு0075 00 900 ஹநு 0005) 19

 

(ஊ) விண்ணப்பக்கட்டணம் உட்பட யாதொரு வரையறுக்கப்பட்ட கட்டணமும், வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்ற மக்களிடமிருந்து வசூலிக்கப்படமாட்டாது.
(எ) கிராம ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் ஒப்பளித்தவாறான வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள நபர்களின் வகைப்பாடு, கட்டணம் செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கும் செயல் நோக்கத்திற்காக, வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள நபர்களை கண்டறிவதற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று தமிழக அரசு பொது (பணியாளரமைப்பு ஐமற்றும் சட்டமியற்றுதல்) துறையின் 14.11.2005ஆம் நாளிட்ட 1138-ஆம் நிலை எண் அரசாணையில் ஆணையிட்டுள்ளது. உரியவாறு சான்றளிக்கப்பட்ட பகுதிநகல் ஒன்று, இந்த சலுகையை பெறுவதற்கு போதுமானதாகும். 

RTI & Legal Awareness...

தகவல் பெறும் உாிமைச்சட்டத்தின் 5 முறையீடுகள்

I. தகவல் கோரும் விண்ணப்பம் - காலவரையறை 30 நாட்கள்

தகவல் கோரும் விண்ணப்பம் பிாிவு 6 (1) APPLICATION

அனுப்புநா் - உங்கள் முகவாி

பெறுநா் - தகவல் பெற விரும்பும் பொது அதிகார அமைப்பின் முகவாி

(பொது தகவல் அலுவலா்,அலுவலக முகவாி, மாவட்டம்.)

உதாரணம்
பொது தகவல் அலுவலா்,
வட்டாட்சியா் அலுவலகம், துாத்துக்குடி.

II. முதல் மேல்முறையீடு (பிாிவு 19 (1)) FIRST APPEAL - 45 நாட்கள்

எதற்காக முதல் மேல்முறையீடு

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்ய வேண்டியது.

III. இரண்டாம் மேல்முறையீடு (பிாிவு 19 (3)) SECOND APPEAL

எதற்காக இரண்டாம் மேல்முறையீடு - 90 நாட்கள்

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்து, முதல் மேல்முறையீட்டு அலுவலா் 45

நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத போது பிாிவு 19 (3)-ன் கீழ்

இரண்டாம் முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டியது.

IV. ஆணையத்திற்கு நேரடி புகாா் (பிாிவு 18 (1) ) COMPLAINT

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் ?

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா்

ஆணையத்திற்கு நேரடியாக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் மனுவை

தாக்கல் செய்ய வேண்டியது.

V. உத்திரவின் மீதான புகாா் (பிாிவு 18 (1)) - 1 வருடம்

COMPLAINT AGAINST ORDER

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் மீண்டும் மேல்முறையீட்டு புகாா் ?

உத்திரவினை நிறைவேற்றாத அல்லது தகவலை திசைதிருப்பிய

தகவலுக்காக பொதுத்தகவல் அலுவலா் மற்றும் பொது அதிகார

அமைப்பின் மீது ஆணையத்திற்கு நேரடி புகாா் பிாிவு 18 (1) -ன்கீழ்

ஆணையத்தின் உத்திரவிட்டதிலிருந்து மேல்முறையீட்டாளா் /

புகாா்தாரா் 1 வருடத்திற்குள் புகாா் மனுவை தாக்கல் 
வேண்டும்

 பிரிவு 8(1)(j)

ஒரு அரசு ஊழியர் தனது பணியில் எடுத்த விடுமுறை என்பது தனிப்பட்ட நபரின் தகவல் என்று பிரிவு 8(1)(j)-யை காரணம் காண்பித்து வழங்க மறுக்கமுடியாது. அந்த பிரிவில் 'வரம்புரையாக' எழுதப்பட்ட வாக்கியங்கள் முக்கியமான ஒன்றாகும். ஒரு தகவலை 8(1)(j)-யை காரணம் காண்பித்து மறுத்தால், அந்த தகவலானது பாரளுமன்றத்திற்கும் அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ மறுக்கப்படவேண்டிய தகவலாக இருக்க வேண்டும். அரசிடம் சம்பளம் பெறும் ஒரு அரசு ஊழியர், அரசுப்பணியில் எடுத்த விடுமுறை விபரங்களை பாரளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ வழங்க மறுக்க முடியாத நிலையில், அந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரினாலும் மறுக்க முடியாது. 
.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கோரி மனு எழுதும்போது, கடைசி பத்தியாக,
.
”நான் கோரும் தகவல்கள் பாரளுமன்றமோ அல்லது மாநில சட்டமன்றமா கோரினால் மறுக்கப்படவேண்டிய தகவல்களா என்ற விபரத்தை வழங்கவும்”
.
என்று மறக்காமல் குறிப்பிடவும். 
.
மேற்படி கோரிய தகவலுக்க பொது தகவல் அலுவலர் ”மறுக்க முடியாது” என்று பதில் எழுதினால், அவர் பிரிவு 8(1)(j)-ன் படி மனுதாரருக்கு கோரிய தகவல்களை வழங்க மறுக்க முடியாது என எதிர்வாதம் புரியலாம். 
.
இது சம்பந்தமாக “கோவாவில் உள்ள மும்பை உயர்நீதிமன்றத்தின் ரிட் ஆணை“ யானது பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. பிரிவு 8(1)(j) சம்பந்தமாக பல மாநில மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் ஆணைகள்ள் இருந்தாலும், உயர்நீதிமன்றமானது மேற்படி பிரிவில் “வரம்புரையாக“ கூறப்பட்டதை கவனத்தில் எடுத்து கொண்டு, வழங்கியிருக்கும் இந்த ஆணை மிக முக்கியத்துவமானது. 

ஆகவே, தகவல்களை கேள்விகள் வடிவில் கேட்கக்கூடாது என்று யாரகிலும் கூறினால் அது தவறான அணுகுமுறை மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிரானது.  (விதிவிலக்கு - கோவா உயர்நீதிமன்ற உத்திரவின்படி “ஏன்“ என்று கேள்வி வடிவில் பிரச்சனைக்கு  தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக விடை அறியக்கூடாது)


Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *