WELCOME TO NEWS THAGAVAL

நிலங்கள் பற்றி சில தகவல்கள்

நிலங்கள் பற்றி சில தகவல்கள் 


நிலங்கள் பற்றி சில தகவல்கள் :

வகைகள் :
01. நஞ்சை
02. புஞ்சை
03. கிராம நத்தம்
04. நத்தம் புறம்போக்கு
05. நீர்நிலை புறம்போக்கு
06. மேய்ச்சல் புறம்போக்கு
07. அனாதீனம்
08. மயானம் புறம்போக்கு
09. வண்டிப்பாதை புறம்போக்கு
10. களத்துமேடு
11. கோவில் நிலம் 

பசலி :-

கிராமக் கணக்குகள் பராமரிக்கப்படும் முறை பசலி ஆண்டு என அழைக்கப்படுகிறது. 

ஜமாபந்தி / வருவாய் தீர்ப்பாயம் :-

அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய 
வரி வசூல், நிலுவை, 
வசூலான தொகைகள் சரியான கணக்குகளில் வரவு வைக்கப்படும் விபரம் 
போன்ற சகல விசயங்களையும் தெரிந்து கொள்ளவும், சரி பார்க்கவும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஜமாபந்தி அதிகாரி / வருவாய் தீர்ப்பாய அதிகாரி கிராமக் கணக்குப் பதிவேடுகள் அனைத்தையும் தணிக்கை செய்வதே ஜமாபந்தி ஆகும். 

வஜா / ரத்து :-

பருவநிலை மாறுபாடுகள் / கனமழை / வெள்ளம் / மழையின்மை / வறட்சி போன்ற காரணிகளால் பயிர்கள் சேதமாகும் போது அரசாங்கம் அந்த ஆண்டிற்கான நிலத்தீர்வையை வஜா/ ரத்து செய்து உத்தரவிடலாம்.
நிலஉரிமையாளர்களின் கவனக்குறைவினால் ஏற்படும் சேதாரங்களுக்கு இது பொருந்தாது. 

ஜமீன் முறை :-

மன்னர் காலத்தில் நிலவரி போன்றவற்றை வசூல் செய்ய இடைத்தரகர்கள் ஏற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜமீன்தாரர் என்று பெயர். 

ஆயக்கட்டு:-

ஒரு பாசன ஆதாரத்திலிருந்து ( ஆறு/குளம்/கால்வாய்)
நீர் பெற பதிவு செய்யப்படும் நிலம். 


நன்செய்/நஞ்சை:-
         பாசன வசதி கொண்ட நிலம்

புன்செய்/புஞ்சை :-
          பாசன வசதி குறைந்த நிலம்/
          மழையை நம்பி விவசாயம்      
          நடைபெறும் நிலம் 

கிராம தானம் :-

          ஒரு கிராமத்தில் பொது பயன்பாட்டுக்காக (சத்திரங்கள்/சுகாதார மையம் போன்றவற்றிற்கு)
நிலத்தை ஒதுக்குவது கிராம தானமாகும். 

தேவதானம்: 

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

பட்டா:- (patta)

           குறிப்பிட்ட ஒரு நிலமோ அல்லது காலிமனையோ யாருடைய பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஆவணம். 

சிட்டா:-

            ஒரு கிராமத்தில் ஒரு உரிமையாளரின் பயன்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய ஆவணம். 

அடங்கல்:-

             ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பு/சர்வே எண்/பயன்பாடு/இடத்தின் அமைவிடம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணம். 

புல எண் :-
              சர்வே எண்/நில அளவை எண் 

விஸ்தீரணம் :- பரப்பளவு 

சுவாதீனம் :- 

             நிலத்தின் மீதான உரிமை
சுவாதீனம் ஒப்படைப்பு: 
             நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

நத்தம் புறம்போக்கு :-

              அரசுக்குச் சொந்தமான இடம் (தனிநபர் பயன்பாட்டில் இருந்த நிலம், குறிப்பிட்ட ஆண்டுகளாக வரி செலுத்தாவிடில் அந்த நிலம் புறம்போக்கு என அறிவிக்கப்பட்டு அரசு நிலமாகப் பதிவு செய்யப்படுவது. 

கிராம நத்தம் :-

                 ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம். 

அனுபோகம் :-
             பாத்தியதை/உரிமை

அனுபவ பாத்தியதை: 
நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

இனாம்தார்: 

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை uகுறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: 

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

கிரயம்: 

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: 

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

தாய்பத்திரம்: 

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: 

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

குத்தகை: 

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *