WELCOME TO NEWS THAGAVAL

பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்

பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத்
திட்டம்: ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 15 ஆயிரம் சேமிக்கும் அற்புதமான திட்டம்

பிரதமர் சூரிய வீடு இலவச மின்சாரத்
திட்டம்: ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 15 ஆயிரம் சேமிக்கும் அற்புதமான திட்டம்
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்றால் என்ன?

நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய சக்தி மின்சாரத்தை தாயரிக்கும் இந்த அலகுகளை அமைக்கும் வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். ரூ. 75,021 கோடி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த லட்சியத் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை பிப்ரவரி 29ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். இரண்டு முதல் 3 கிலோ வாட் உற்பத்தித் திறனுக்கு கூடுதலாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறன் ஆகும்.
ஒரு கிலோ வாட் அமைப்புக்கு ரூ.30,000 மானியம் கிடைக்கும். இரண்டு கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 60,000மும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும்  அலகுக்கு ரூ.78,000மும் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன?
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். சூரிய சக்தி தகடுகளை அமைப்பதற்கு ஏற்ற வகையிலான கூரை கொண்ட சொந்த வீடு இருக்கவேண்டும்.  அந்த வீட்டிற்கு மின்சார இணைப்பு கட்டாயம் இருக்கவேண்டும். வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் சூரிய சக்தி மின்சாரத்திற்காக மானியம் பெறுபவராக இருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் எவ்வாறு சேர்வது?
இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தேசிய தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மின்சார விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் மாநிலத்தை அதில் குறிப்பிட வேண்டும். இந்தத் தளத்தில், திட்டத்தில் சேர்வதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்.  மேற்கூரை சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் நிறுவனங்களையோ அல்லது தனிநபர்களையோ நுகர்வோர் தேர்வு செய்து கொள்ளலாம்.
மின் நுகர்வோர் கடன் வசதி பெறமுடியுமா?
மின்சார நுகர்வோர் சோலார் மின் அமைப்புகளை நிறுவுவதற்கு கடன் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.  3 கிலோ வாட் அமைப்புகளை நிறுவ 7 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்ததிற்கு ஏற்ப கடன் விகிதம் மாறுபடும். உதாரணத்திற்கு  தற்போதைய  6.5% என்ற ரெப்போ வட்டி விகிதம், 5.5 % மாக குறைந்தால், இந்தத் திட்டத்தின் 7% வட்டி என்பது 6% மாக குறையும்.
மானியம் பெறுவதற்கான வழிமுறை என்ன?
மானியத்தை பெறுவதற்கு முதலில் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். மாநிலம் மற்றும் மின் விநியோக நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும். மின் இணைப்பு எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
இதனையடுத்து மின் இணைப்பு எண் மற்றும் செல்பேசி எண்ணை லாக் இன் செய்ய வேண்டும். படிவத்தின் அடிப்படையில் மேற்கூரை சூரிய சக்தி இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய அனுமதி பெற்றபின், பதிவு செய்துள்ள விற்பனையாளர் மூலம் சூரிய சக்தி தகடுகளை வீட்டின் மேற் கூரையில் நிறுவலாம். சூரிய சக்தி அளவு நிறுவப்பட்ட பின்பு அதன் விவரங்களைத் தெரிவித்து மீட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மின் விநியோக நிறுவனம், மீட்டரைப் பொருத்திய பின்பு அமைப்புச் சான்றிதழை இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நுகர்வோர் தங்களது  வங்கிக் கணக்கு விவரங்களை கேன்சல் செய்யப்பட்ட காசோலை மூலம் தளத்தில் தெரிவிக்கலாம். அடுத்த 30 நாட்களுக்குள் உங்களுக்கான மானியம் உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தில்  வீடுகள் ஏன் சேர்க்கப்படுகின்றன?
மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பதற்காகவே இந்தத் திட்டத்தில் வீடுகள்  சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் உபரியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கானத் தொகையை மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து பெற்று கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம், 3 கிலோ வாட் சூரிய மின் சக்தி அலகை நிறுவி, மாதத்தில்  300 யூனிட் மின்சாரத்தை நுகரும் வீட்டுக்கு ஓராண்டில் தோராயமாக ரூ. 15 ஆயிரம் சேமிப்பை உத்தரவாதப்படுத்துகிறது. இத்தகையை வீடுகள் தங்களது சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்து, சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 1875 வரை சேமிக்கலாம்.
சோலார் அலகை நிறுவுவதற்கு பெறும் கடனுக்கான மாதாந்திர தவணையாக ரூ. 610 செலுத்தியப் பின்னர், மாதத்திற்கு ரூ. 1265 வீதம் தோராயமாக ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் மிச்சப்படுத்தலாம். கடன் பெறாத வீடுகளின் சேமிப்பு மேலும் அதிகமாக இருக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம், பசுமைப் பூமி என்னும் லட்சியத்திற்கான பங்களிப்பை வழங்கும் வாய்ப்பும் கிட்டும்.

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2024 8:15PM by PIB Chennai (வெளியீட்டு அடையாள எண்: 2010760)



Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *