WELCOME TO NEWS THAGAVAL

இணையத்தில் ஓட்டுநர் உரிமம்- How to apply online Driving license


இணையத்தில் ஓட்டுநர் உரிமம் வாங்குவது எப்படி? - How to apply online Driving license?

இணையத்தில் ஓட்டுநர் உரிமம்- How to apply Online Driving License?
வாகன ஓட்டுனர்களுக்கு தேவையான முக்கியமான சான்றிதழ்களில் ஒன்று ஓட்டுநர் உரிமம் (Driving License).உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இணையதளத்தின் மூலம் வாங்கும் வசதியைப் புதிதாக அறிமுகம் செய்து எளிதாக்கி உள்ளது மத்திய அரசு.
இணையத்தில் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிவு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
முதலில் parivahan வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். அல்லது கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி parivahan வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
  • வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் "சாரதி"(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள "டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்"(Driving Licence Related Service) கிளிக் செய்யுங்கள்.
  • உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள்.
  • திரையின் இடது பக்கத்தில் "டிரைவிங் லைசென்ஸ்"(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும்.
  • "அப்ளை ஆன்லைன்"(Apply Online) ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும்.
  • புது கற்றுணர் உரிமம் (New Learner Licence)
  • புது ஓட்டுனர் உரிமம் (New Driving Licence)
  • ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)
என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும்.

முக்கிய குறிப்பு 1: உங்கள் முதல் ஓட்டுனர் உரிம சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் கற்றுணர் உரிமம் வாங்குவது மிக அவசியம்.
முக்கிய குறிப்பு 2: உங்களுக்கு இதற்கு முன்னாள் ஓட்டுனர் உரிம சான்றிதழ் இருந்தால்,அதை இங்கேயே புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் காணாமல் போன ஓட்டுனர் உரிமத்தை டூப்ளிகேட் வாங்க இங்கேயே அப்ளை செய்துகொள்ளலாம்.

செயல்முறைகள் :-
முதலில் உங்கள் கற்றுணர் உரிமம் (New Learner Licence) சான்றிதழ் வாங்கச் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
செயல்முறை 1:-
  • புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) கிளிக் செய்யவும்.
  • உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான ஃபார்ம் இப்பொழுது வரும்.
  • உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்து.
  • உங்கள் சேவையையும் தேர்வு செய்யுங்கள்.
செயல்முறை 2:
  • இப்பொழுது உங்களுக்கான கற்றுணர் உரிமம் ஃபார்ம் தெரியும்.
  • (Applicant does not hold Driving/ Learner Licence) இதற்கு முன் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் கற்றுணர் உரிமம் இல்லை என்ற ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள்
  • இறுதியாக சப்மிட் கிளிக் செய்யுங்கள்.
ஃபார்ம் 1:
இப்பொழுது உங்கள் தனி நபர் விவரங்களை கற்றுணர் உரிமம் ஃபார்ம் இல் பதிவேற்றம் செய்யுங்கள்.
இறுதியாக Submit Click செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பியுங்கள்.
இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள். இத்துடன் உங்களுக்கான குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் இன்பாக்ஸ் இல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
ஃபார்ம் 2:
உங்கள் ஸ்கேன் செய்த தனிப்பட்ட மூன்று அடையாள சான்றிதழை பதிவேற்றம் செய்யுங்கள்.
உங்கள் பதிவேற்றம் சீராக நடந்தபின் உங்களுக்கான ஒப்புகை உறுதி செய்யப்படும்.
இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழை பிரிண்ட் செய்யுங்கள்.
உங்களுக்கான ஃபார்ம் 1 ஐ பிரிண்ட் செய்துகொள்ளுங்கள்.
உங்களுக்கான ஃபார்ம் 1 எ பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் பதிவேற்றத்திற்கான கட்டணத்தைச் செலுத்தி உங்கள் கற்றுணர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இதே வழிமுறை படி உங்களுக்கான புதிய ஓட்டுனர் உரிமம் மற்றும் காணாமல் போன ஓட்டுனர் உரிமத்தை புதியதாய் வாங்கிக்கொள்ளலாம். இதே போல் பழைய ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பித்தும் கொள்ளலாம்.



கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *